வானொலி வரலாற்றில் புதுமையான முறையில் கோவையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ஆலயம் பண்பலை 90 என்ற சமுதாய வானொலி மக்களின் பொழுது போக்கிற்காகவும் பழுது போக்கிற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது,
ஆலயம் 90 சமுதாய பண்பலை வானொலியில் ஆலய தரிசனம் என்ற பெயரில் அன்றைய நாளின் சிறப்பு, ராசி பலன்கள் என ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்கள்,
குட் மார்னிங் கோயம்புத்தூர் என்ற நிகழ்ச்சியில் கோவையை சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகள் பற்றியும்,
கோயம்புத்தூர் குறும்புங்கோ என்ற பெயரில் நமது கோவையின் சிறப்பாக இருக்கும் கொங்கு தமிழ் மொழியில் அக்கம் பக்கம் நிகழக்கூடிய நிகழ்வுகளை எதார்த்தமாக வழங்கும் நிகழ்ச்சியும்,
நம்ம ஊரு சயின்டிஸ்ட் என்ற பெயரில் அறிவியல் சார்ந்த விஷயங்களும்,
கேளடி கண்மணி என்ற பெயரில் பெண்களுக்காக அழகு குறிப்புகள் வீட்டு குறிப்புகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என அனைத்தும்,
உழவரும் உத்தியோகமும் என்ற பெயரில் விவசாயம் சார்ந்த பல்வேறு நிபுணர்களின் விளக்கங்களும் வேலை வாய்ப்புகளை பற்றிய தகவல்களை துறை சார்ந்த வல்லுநர்களும் வழங்குகின்றனர்.
கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கு பெறும் கொஞ்சும் மழலை என்ற பெயரில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியும்,
ஜோடி நல்ல ஜோடி என்ற பெயரில் கணவன் மனைவி பங்குபெறும் நிகழ்ச்சியும்,
தில்லாலங்கடி என்ற பெயரில் விளையாட்டு நிகழ்ச்சியும்,
நினைவில் நின்றவை என்ற பெயரில் இசை பிரபலங்கள் பற்றின சுவாரசியமான தகவல்களும் இடம் பெறுகின்றன.
ஒலி பரப்பாக்கூடிய அத்துணை நிகழ்ச்சிகளும் புதுப்புது குரல்களில் தொகுத்து வழங்கப்படுகின்றன.
சேவையின் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதுமையான சமுதாயப் பண்பலை வானொலி என்பது குறிப்பிடத்தக்கது
நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரத் தொடர்பிற்கு 9944229090 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்