உணருங்கள்

உணருங்கள்

Thilak
00:01:32
Link

About this episode

உணருங்கள்! When you realize how perfect everything is you will tilt your head back and laugh at the sky - எண்ணம் சிதறாது இம்மியும் பிசகாது வாழ்வோர் வெற்றி பெறுவர். அர்ச்சுணன் கிளியின் கண்ணைக்குறி வைத்த கதை சுவாரஷ்யமானது. படிப்பினை மிக்கது. உங்கள் வாழ்வின் குறிகோள் உங்களை உயர்த்தும். உங்களிடம் உங்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? என்று கேட்டால் பெரும்பாலும் சட்டென உங்களால் பதில் சொல்ல முடியாமல் இருக்கும்.
வைத்தியர், பொறிலியளாலர், ஆசிரியர் ஆகுவது என்று நீங்கள் சொல்லும் பதில்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறிக்கோள் அல்ல. அவைதான் குறிக்கோள் என எமக்கு கற்றுத்தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் நாம் அவைதான் குறிக்கொள் என வரையறுத்து வாழ்கிறோம். என்றோ ஒருநாள் அவற்றை அடைவோம். அப்போது மகிழ்ச்சிப்பெருமிதம் கொள்வோம். வாழ்வின் உயர் இலட்சியத்தையே அடைந்து விட்டதாக ஆனந்தம் கொள்வோம். அந்தநாள் இனிய நாள்… நினைக்க நினைக்க இனிக்கும் நாள்…
ஆனால், உண்மையில் அவைதானா எமது குறிக்கோள்? வைத்தியர், பொறிலியளாலர், ஆசிரியர்… என்று தொழில் புரியும் அனைவரும் தத்தமது குறிக்கோளை அடைந்து விட்டனரா? அப்படியென்றால் குறிக்கோளை அடைவது என்பது சாதனை அல்ல. சாதாரண விடயம். ஆம், அப்படித்தான்
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!