1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Kadhai Osai - Tamil Audiobooks
இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே வழங்கப்பட்டு, இனி அப்பெயரிலேயே முழு பாரதத்திலும் இடம்பெறப் போகின்ற கங்கா புத்திரன் தேவவிரதன், சத்தியவதியின் சம்மதத்தைப் பெற்று அவளையும் அவள் பெற்றோர் உற்றார் உறவினருடனும் அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த காட்சியை இவ்வாரம் கேட்டு ரசியுங்கள். மன்னர் சாந்தனுவின் மனப்பாங்கு எப்படியிருந்தது? அவரை பீஷ்மன் எப்படி சமாளித்தான்? மன்னர் பீஷ்மனுக்கு வழங்கிய வரம் என்ன?
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
இத்துடன் முதற் பாகமாகிய "புத்ர பீஷ்ம பர்வம்" நிறைவுறுகிறது. இனி அடுத்த பாகம் "சகோதர பீஷ்ம பர்வம்" தொடங்கும்.
#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology