1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Kadhai Osai - Tamil Audiobooks
இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா?
தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன?
வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
#mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun