புத்தி கூறும் புத்தன்

புத்தி கூறும் புத்தன்

Thilak
3 episodes

About

வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்! அறியவேண்டிய தகவல்கள்!
more

Language

English

Top CategoriesView all

04 September 2020

உணருங்கள்

Thilak
உணருங்கள்! When you realize how perfect everything is you will tilt your head back and laugh at the sky - எண்ணம் சிதறாது இம்மியும் பிசகாது வாழ்வோர் வெற்றி பெறுவர். அர்ச்சுணன் கிளியின் கண்ணைக்குறி வைத்த கதை சுவாரஷ்யமானது. படிப்பினை மிக்கது. உங்கள் வாழ்வின் குறிகோள் உங்களை உயர்த்தும். உங்களிடம் உங்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? என்று கேட்டால் பெரும்பாலும் சட்டென உங்களால் பதில் சொல்ல முடியாமல் இருக்கும். வைத்தியர், பொறிலியளாலர், ஆசிரியர் ஆகுவது என்று நீங்கள் சொல்லும் பதில்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறிக்கோள் அல்ல. அவைதான் குறிக்கோள் என எமக்கு கற்றுத்தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் நாம் அவைதான் குறிக்கொள் என வரையறுத்து வாழ்கிறோம். என்றோ ஒருநாள் அவற்றை அடைவோம். அப்போது மகிழ்ச்சிப்பெருமிதம் கொள்வோம். வாழ்வின் உயர் இலட்சியத்தையே அடைந்து விட்டதாக ஆனந்தம் கொள்வோம். அந்தநாள் இனிய நாள்… நினைக்க நினைக்க இனிக்கும் நாள்… ஆனால், உண்மையில் அவைதானா எமது குறிக்கோள்? வைத்தியர், பொறிலியளாலர், ஆசிரியர்… என்று தொழில் புரியும் அனைவரும் தத்தமது குறிக்கோளை அடைந்து விட்டனரா? அப்படியென்றால் குறிக்கோளை அடைவது என்பது சாதனை அல்ல. சாதாரண விடயம். ஆம், அப்படித்தான் உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
09 August 2020

Budhan_Cover_Promo

Thilak
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், மனதில் தோன்றும் எண்ணங்கள் எப்படி இருந்தால் வெற்றி பெற முடியும் என இது போன்ற பல விஷயங்களை, பற்பல தத்துவங்களை நம் வரலாறு, புராண இலக்கியங்கள், கதைகள் போன்றவை எடுத்துரைத்து உள்ளன; மேலும் முன் நாட்களில் வாழ்ந்த பல அறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், வெற்றி பெறுவது எப்படி, எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது எப்படி போன்ற நூறாயிரம் கருத்துக்களை வலியுறுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமான மனிதர் புத்தர். வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்! அறியவேண்டிய தகவல்கள்!
09 August 2020

கோபம்

Thilak
You will not be punished for your anger, you will be punished by your anger - உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்!